Breaking News

நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ரத்து முழு விபரம்

அட்மின் மீடியா
0

 நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ரத்து முழு விபரம்




இன்று நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

நாடு முழுவதும் உள்ள மருத்து கல்வி நிறுவனங்களில் மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வாக முதுநிலை நீட்(NEET - PG) தேர்வு நடைபெறுகிறுகிறது. எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ போன்ற படிப்புகளில் சேர இந்த முதுநிலை நீட் தேர்வு அவசியம்.

இந்த தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் நடத்துகிறது. இந்நிலையில் 2024- 25 கல்வி ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு இன்று ஜூன் 23 நடைபெறவிருந்தது. நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களில் இந்த தேர்வு நடைபெறவிருந்தது. ஆண்டுதோறும் இந்த முதுநிலை நீட் தேர்வில் சுமார் 2 லட்சம் எம்பிபிஎஸ் பட்டதாரிகள் பங்கேற்கின்றனர்.

கடைசி நேரத்தில் முதுநிலை நீட் தேர்வு ரத்து

இந்நிலையில், 2024 முதுநிலை நீட் தேர்வுகள் திடீரென கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுதொரட்பாக நேற்றைய தினம் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை (அதாவது இன்று)நடைபெற இருந்த நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். சில போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback