சாதிமறுப்பு திருமணத்தை நடத்தி வைத்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார் நடந்தது என்ன முழு விவரம்
சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்த காரணத்திற்காக இன்று பெண் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாதிமறுப்பு திருமணத்தை நடத்தி வைத்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார் நடந்தது என்ன முழு விவரம்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காதல் ஜோடி காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் இவர்களுக்கு திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள லெனின் சிலை முன்பாக காதல் ஜோடிக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.இந்த நிலையில் பெண் வீட்டார் தங்களது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதுமண தம்பதிகள் இருப்பதாக பெண்ணின் வீட்டிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு கூட்டமாக வந்த பெண் வீட்டார் தங்கள் வீட்டு பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.
இதனால் அங்கு கூடி இருந்தவர்களுக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இரு தரப்புக்கும் கைகளப்பு ஏற்படவே ஆத்திரமடைந்த பெண் வீட்டார் கட்சி அலுவலகத்தை சூறையாடினர்.
பெண்ணின் தாயார் மற்றும் உறவினர்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மேலும் தீக்கதிர் பேப்பர் அலுவலகத்தையும் தாக்கியுள்ளனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/Saranjournalist/status/1801609713064317248
Tags: தமிழக செய்திகள்
