Breaking News

குற்றாலம் ஐந்தருவியில் மீனுக்காக சண்டையிடும் பாம்புகள் என பரவும் வீடியோ முழு விவரம்

அட்மின் மீடியா
0

குற்றாலம் ஐந்தருவியில் மீனுக்காக சண்டையிடும் பாம்புகள் என பரவும் வீடியோ முழு விவரம்

குற்றாலம் ஐந்தருவியில் நீரில் அடித்து வரப்பட்ட மீன்களுக்காக 2 மலைப் பாம்புகள் சண்டையிடுவதாக ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?

இது முற்றிலும் பொய்யான தகவல்.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ குற்றாலத்தில் எடுக்கப்பட்டது இல்லை' வனத்துறை விளக்கமளித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம், ஐந்தருவியில் மலை பாம்புகள் மீனைப் பிடித்து சாப்பிடுவதும், மீனுக்காக 2 மலைப்பாம்புகள் சண்டை போடுவது போல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இது குறித்து வனச்சரகர் பிரகாஷ் கூறுகையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் ஐந்தருவி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம், இப்படி ஒரு சம்பவம் அந்த பகுதியில் நடக்கவில்லை என தெரிவித்தனர். 

இதனால் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பீதி அடைய வேண்டாம் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள் மறுப்பு செய்தி வைரல் வீடியோ FACT CHECK

Give Us Your Feedback