கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு முழு விவரம்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
25.06.2024 மற்றும் 26.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
27.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி அறிவிப்பு!
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று ஒருநாள் (ஜூன் 26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
