விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அறிவிப்பு
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அறிவிப்பு
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் மீது ஜூன் 24-ம் தேதி பரிசீலனை; மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26-ம் தேதி கடைசிநாள் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும்
ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்
ஜூன் 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் கடைசி நாள்
ஜூன் 24-ம் தேதி பரிசீலனை
ஜூன் 26-ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்
ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல்
ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான ந.புகழேந்தி இவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற திதொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருகிற 10-07-2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தோழமைக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு. அன்னியூர் சிவா (விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார் என அறிவிக்கப்பாட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள்
