Breaking News

மாலத்தீவு அதிபருக்கு பில்லி சூனியம் வைத்த பெண் அமைச்சர் கைது நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

மாலத்தீவு அதிபருக்கு பில்லி சூனியம் வைத்த பெண் அமைச்சர் கைது நடந்தது என்ன முழு விவரம்


அண்டை நாடான மாலத்தீவு அதிபராக இருப்பவர் முகமது முய்சு. அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் பாத்திமா ஷம்னாஸ். அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்ததாக சந்தேகத்தின் பேரில் பாத்திமா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். 

சோதனையில், சூனியம் தொடர்பான பல பொருட்களை கைப்பற்றினர். இதனையடுத்து பாத்திமா ஷம்னாஸ் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாலத்தீவில், பண்டிதா அல்லது சிஹூரு என அழைக்கப்படும் பில்லி, சூனியம் வைப்பது கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இச்சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback