தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் தென்னக ரயில்வே அறிவிப்பு
தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் தென்னக ரயில்வே அறிவிப்பு
தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-
தாம்பரம் - ராமநாதபுரம் இடையே வாரம் இருமுறை இயங்கும் வகையில் சிறப்பு ரயில் (வண்டி எண் 06051) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்கும்.
அதன்படி ஜுன் 21, 23, 28, 30, ஜுலை மாதம் 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு பறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.50 மணிக்கு ராமநாதபுரத்தை சென்றடையும்.
அதேபோல் மறுமார்க்கமாக ராமநாதபுரம் - சென்னை தாம்பரம் இடையே வாரம் இருமுறை சனி மற்றும் திங்கட்கிழமைகளில் சிறப்பு ரயில் (06052) இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் ஜுன் 22, 24, 29, ஜுன் 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29 ஆகிய நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும்.
மேலும் இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: முக்கிய செய்தி

