Breaking News

ரயிலில் நடு பர்த்தில் சரியாக மாட்டாத செயின் கழன்று படுக்கை கீழே விழுந்து பயணி உயிரிழப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

ரயிலில் படுக்கை விழுந்து படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு எர்ணாகுளத்தில் இருந்து நிஜாமுதீன் வரை செல்லும்அதிவிரைவு ரயில் (12645) ஜூன் 15-ஆம் தேதி புறப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டம் பொன்னானி பகுதியை சேர்ந்த அலி கான் வயது 62 எஸ் 6 பெட்டியில் நெ. 51 கீழ் படுக்கையில் பயணித்துள்ளார்.

இந்த ரயில், மாலை 6 மணியளவில் தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, நடுப்படுக்கை கழன்று அலி கானின் மீது விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.உடனடியாக ராமகுண்டம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் வாரங்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று திங்கள்கிழமை உயிரிழந்தார்.




இந்த சம்பவம் குறித்து கேரள காங்கிரஸ் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில்

பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவின் கீழுள்ள ரயில்வேவின் நிலை:போதுமான ரயில்கள் அல்லது இருக்கைகள் இல்லை. நீங்கள் பாதுகாப்பாக ரயிலில் ஏற முடியாது, ஏறினால் இருக்கை இல்லை, இருக்கை கிடைத்தாலும் விபத்து அல்லது சுகாதாரமின்மை போன்றவற்றால் நீங்கள் கொல்லப்படலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்க்கு மறுப்பு தெரிவித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

விபத்துக்கான காரணம் நடு இருக்கையில் இருந்த பயணி சரியாக சங்கிலியை மாட்டாததுதான் என்றும், நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் படுக்கையின் உறுதித்தன்மை சரிபார்த்ததில் நன்றாக இருந்ததாகவும் ரயில்வே அமைச்சகம் அளித்துள்ளது.

• Train 12645 Ernakulam to H. Nizamuddin on date 15/6/2024 departed from Ernakulam station and reached H.Nizamuddin station before time on 17/6/2024.

• The concerned passenger was traveling on seat no. 57 (lower berth) of S/6 coach. The upper berth seat fell down due to improper placement of chain of the upper berth. Due to improper chaining of seat of upper berth by passenger, the seat fell down.

• It is clarified that the seat was not in damaged condition, neither it had fell down nor crashed/ fallen as claimed by the news article.

• The seat was checked at Nizamuddin station and found Ok.

• Hence, the post of crashing seat is misleading.

• Railway staff on other hand after getting message at around 18:34 hrs (15.6.2024) at Ramagundam station, on-duty station master, immediately arranged for assistance by 108 Ambulance and made unscheduled stoppage of the train at Ramagundam. The passenger was shifted from the coach to the ambulance and admitted in the nearby hospital.

ஜூன் 15 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட ரயில் ஜூன் 17 ஆம் தேதி நேரத்திற்கு முன்பே ஹசரத் நிஜாமுதீன் நிலையத்தை அடைந்தது

பயணி S6 பெட்டியின் இருக்கை எண் 57 (கீழ் பெர்த்) இல் பயணம் செய்தார். மேல் பெர்த்தின் செயின் சரியாக பொருத்தப்படாததால் மேல் பெர்த்தின் இருக்கை கீழே விழுந்தது. 

பயணிகளால் மேல் படுக்கையில் இருக்கையை சரியாக சங்கிலியால் பிணைக்காததால், இருக்கை கீழே விழுந்தது. இருக்கை சேதமடைந்த நிலையில் இல்லை, அது கீழே விழவோ அல்லது நொறுங்கவோ/விழவோ இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது. 

ராமகுண்டம் ஸ்டேஷனில் 18:34 மணிக்கு ஒரு செய்தி கிடைத்ததும், பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் உதவிக்கு ஏற்பாடு செய்து, ராமகுண்டத்தில் ரயிலை திட்டமிடாமல் நிறுத்தினார். பயணி பெட்டியிலிருந்து ஆம்புலன்ஸுக்கு மாற்றப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback