Breaking News

தீபாவளிக்கு சொந்த ஊர் போகபோறிங்களா - ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தீபாவளிக்கு சொந்த ஊர் போகபோறிங்களா - ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் முழு விவரம்

பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு முழு விவரம்

தீபாவளியை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கி 3 நாட்கள் முன்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் .31 தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளிலும், ரயில்களிலும் மக்கள் செல்வது வழக்கம். அதன்படி சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்ல டிக்கெட்டை ரிசர்வ் செய்து விடுவது சிறந்தது. 

அதன்படி ரயில்களில் 120 நாள்களுக்கு முன் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.எனவே அக்.28 இல் சொந்த ஊர் செல்ல பயணிக்க விரும்புவோர் இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

அதேபோல் அக்.29 இல் சொந்த ஊர் செல்ல பயணிக்க விரும்புவோர் நாளை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். எனவும் அக்.30 இல் சொந்த ஊர் செல்ல பயணிக்க விரும்புவோர் நாளை மறுநாள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback