Breaking News

தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகள் என்ன ? என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகள்  என்ன ? என்ன முழு விவரம்

தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவுக்கின்றது


திமுக கூட்டணி சார்பில் :-

திமுக 21 இடங்களிலும் ,காங்கிரஸ் 9 இடங்களிலும் ,சிபிஐ, சிபிஎம், விசிக தலா இரு இடங்களிலும் ,கொமதேக,மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணி சார்பில்:-

அதிமுக 33 இடங்களிலும் புதிய தமிழகம் 1 இடத்தில் (இரட்டை இலை சின்னத்தில்), தேமுதிக 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.

பாஜக கூட்டணி சார்பில் :-

பாஜக 19 தொகுதிகளிலும் ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், சிவநேசன், பாரிவேந்தர் ஆகியோரின் கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. 

பாமக 10 இடங்களிலும் தமாகா 3 இடங்களிலும் அமமுக 2 இடங்களிலும் சுயேச்சையாக ஓபிஎஸ் ஒரு இடத்திலும் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் நட்சத்திர தொகுதிகள் 12 உள்ளன. 

தென் சென்னை, சிதம்பரம், வேலூர், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, தருமபுரி, தென்காசி, விருதுநகர், நீலகிரி ஆகிய தொகுதிகள் பார்க்கப்படுகின்றன.

1. தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி:-

திமுக சார்பில் தமிழச்சி தங்க பாண்டியன், 

அதிமுக சார்பில் ஜெயவர்தன் 

பாஜக  சார்பில்  ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிட்டனர். 

2. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி : 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 

பாஜக சார்பில் கார்த்தியாயினி, 

அதிமுக சார்பில் சந்திரஹாசன் ஆகியோர் போட்டியிட்டனர். 

3. வேலூர் நாடாளுமன்ற தொகுதி:-

திமுக சார்பில் கதிர் ஆனந்த், 

பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம், 

அதிமுக சார்பில் பசுபதி ஆகியோர் போட்டியிட்டனர். 

4. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி: -

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் சுயேச்சையாக  போட்டியிட்டுள்ளார்

திமுக சார்பில் ஐயூஎம்எல் நவாஸ் கனி, 

அதிமுக சார்பில் ஜெய் பெருமாள் ஆகியோர் போட்டியிட்டனர்.

5. தேனி நாடாளுமன்ற தொகுதி: -

தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 

திமுக சார்பில் தங்கதமிழ்ச் செல்வன், 

அதிமுக சார்பில் வி.டி.நாராயணசாமி ஆகியோர் போட்டியிட்டனர்.

6. தூத்துக்குடிநாடாளுமன்ற தொகுதி:- 

திமுக சார்பில் கனிமொழி, 

அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, 

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன் ஆகியோர் போட்டியிட்டனர்.

7. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி: -

காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த், 

பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், 

அதிமுக சார்பில் பசிலியன் நசரத் ஆகியோர் போட்டியிட்டனர்.

8. கோவை நாடாளுமன்ற தொகுதி: -

பாஜக சார்பில் அண்ணாமலை, 

திமுக சார்பில் கணபதி ராஜ்குார், 

அதிமுக சார்பில் சிங்கை ராமசந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

9. தருமபுரி நாடாளுமன்ற தொகுதி:- 

பாமக சார்பில் சவுமியா அன்புமணி, 

திமுக சார்பில் மணி, 

அதிமுக சார்பில் ஆர்.அசோகன் ஆகியோர் போட்டியிட்டனர்.

10 .தென்காசி நாடாளுமன்ற தொகுதி: -

பாஜக சார்பில் ஜான் பாண்டியன், 

அதிமுக சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, 

திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோரும் போட்டியிட்டனர்.

11. நீலகிரி நாடாளுமன்ற தொகுதி: -

திமுக சார்பில் ஆ.ராசாவும் 

அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச் செல்வன்,

பாஜக சார்பில் எல் முருகன் ஆகியோர் போட்டியிட்டனர்.

12. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி : -

அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் விஜய பிரபாகரன்

காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர்

பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

ஜூன் 4 ம் தேதி காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback