பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி முழு விவரம்
பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி!
மத்திய அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌதி முர்முவிடம் அளித்து மோடி ராஜினாமா செய்தார்
மத்திய அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌதி முர்முவிடம் அளித்து மோடி ராஜினாமா செய்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
குடியரசுத் தலைவரின் அறிவுரையை ஏற்று புதிய அரசு அமையும் வரை காபந்து பிரதமராக நீடிப்பார் பிரதமர் மோடி
2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது.
பாஜக ஆட்சி அமைக்க தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.இவர்களின் ஆதரவு எல்லாம் இருந்தால்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர்.
கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மொத்த அமைச்சரவையையும் கலைத்துவிட்டு கூட்டணி கட்சிகளுடன் தே.ஜ. கூட்டணி புதிய அமைச்சரவையை அமைக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags: அரசியல் செய்திகள்
