Breaking News

பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா,கல்யாணராமன் அதிரடியாக நீக்கம்

அட்மின் மீடியா
0

பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா,கல்யாணராமன் அதிரடியாக நீக்கம்




திமுக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பில் உள்ளார்

இந்நிலையில் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து திருச்சி எஸ் சூர்யா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் சாய் சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி எஸ் சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பாஜக சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் திரு.கல்யாணராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக மாநில அலுவலக செயலாளர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்

சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் திரு.கல்யாணராமன் அவர்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார்.

இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி திரு.கல்யாணராமன் அவர்கள் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் 1 வருடத்திற்கு நீக்கப்படுகிறார். 

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback