தனியார் பள்ளி 7ம் வகுப்பு பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய பாடம் - முழு விவரம்
தனியார் பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா பற்றிய பாடம் - முழு விவரம்
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெப்பால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை என்கிற பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய குறிப்புகள் இடம்பெற்று உள்ளது இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய விஷயம் என்ன உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
பள்ளி பாட புத்தகத்தில் தேச தலைவர்கள், சாதனை செய்தவர்களின் பாடங்கள் மட்டுமே வைக்கப்படும் நிலையில் நடிகை தமன்னாவின் பாடம் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்
