மகாராஷ்டிரா சங்கிலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட விஷால் பாட்டில் காங்கிரஸில் இணைந்தார்
மகாராஷ்டிரா சங்கிலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட விஷால் பாட்டில் காங்கிரஸில் இணைந்தார் இதனால் காங்கிரஸ் எம்பிக்களின் எண்ணிக்கை 100-ஐ தொட்டது!
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் வசந்த் தாதா பாட்டீலின் பேரனான பாட்டீல், பாரதிய ஜனதா கட்சி (BJP) வேட்பாளர் சஞ்சய் காகா பாட்டீல் மற்றும் சிவசேனா (UBT) போட்டியாளர் சந்திரஹர் பாட்டீல் ஆகியோருக்கு எதிராக கடுமையாகப் போராடி சுயேட்சையாக வெற்றி பெற்றார்.இந்நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இதன் மூலம் இந்தியா கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.
முன்னாள் முதல்வர் வசந்ததாதா பாட்டீலின் பேரன் விஷால் பாட்டீல் . முன்னாள் எம்பி பிரகாஷ்பாபு வசந்ததாதா பாட்டீல் மற்றும் மகிளா பிரதேச காங்கிரஸ் தலைவர் ஷைல்ஜா பாட்டீல் ஆகியோரின் மகனும், முன்னாள் மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சருமான பிரதிக் பிரகாஷ்பாபு பாட்டீலின் இளைய சகோதரர் ஆவார். அவருக்கு எஹிதா மற்றும் அரித்ரா என்ற இரு மகள்கள் உள்ளனர்
Tags: அரசியல் செய்திகள்
