சந்திரபாபு நாயுடு அவர்களின் பதவியேற்பு விழாவில் தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா வைரலாகும் வீடியோ
சந்திரபாபு நாயுடு அவர்களின் பதவியேற்பு விழாவில் தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா வைரலாகும் வீடியோ
ஆந்திராவில் நடைபெறும் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அமித் ஷா கண்டிப்புடன் பேசியதாக ஓர் வீடியோ வைரல் ஆகின்றது மேலும் இந்த வீடியோ தற்போது டிவிட்டரில் டிரண்டிங்கில் உள்ளது
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பின்பு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஆந்திராவில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் தமிழிசை அமித்ஷாவுக்கு வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார்.
பதிலுக்குத் தமிழிசை எதோ கூற வரும்போது தமிழிசை சவுந்தரராஜன் கூறுவதை ஏற்க மறுத்து தான் சொல்வதை கேட்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது போன்று உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் இருந்த நிலையில், மத்திய மந்திரி அமித் ஷா மேடையில் வைத்தே தமிழிசை சவுந்தரராஜனிடம் கடுமையாக பேசிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/kitaab31/status/1800823682920763672
Tags: அரசியல் செய்திகள்
