சென்னை கோயம்பேட்டில் மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டம் முழு விவரம்
சென்னை கோயம்பேட்டில் மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டம் முழு விவரம்
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்குச் சொந்தமான நிலத்தில் மஸ்ஜித்-இ-ஹிதாயா மற்றும் மதரஸாவின் கட்டுமானம், தேவையான ஒப்புதல்கள் இல்லாமல் என கோயம்பேட்டில் அமைந்துள்ள மசூதி மற்றும் மதரஸாவை "முற்றிலும் சட்டவிரோதமாக கட்டப்பட்டது" என்று கூறி இடிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது
இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு, உச்ச உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி.விஸ்வ நாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.விசாரணையில் உச்ச நீதிமன்றமும் மசூதி மற்றும் மதரசா கட்டடங்கள் சட்ட விரோதமாகத்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து, அதனை இடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி மசூதி இடிப்பிற்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இந்த இடம் முறைப்படி கிரையம் செய்யப்பட்டு, 43 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளோம். இதற்கான வரிகளும் நாங்கள் இதுவரை சரியாக கட்டியுள்ளோம்.. சமூக விரோதிகள் சிலர் இந்த மசூதியின் மீது காழ்ப்புணர்வு கொண்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மசூதி இருக்கும் நிலம் பேருந்து நிலையத்திற்குச் சொந்தமான இடம் என்று சொல்கிறார்கள்.ஆனால், பள்ளிவாசலைச் சுற்றி 2000 குடும்பங்கள் குடியிருக்கின்றன. ஆனால் மசூதியை மட்டும் ஆக்கிரமிப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் ஆக்கிரமிக்கப்பட்ட இடமும் கிடையாது. எனவே, இது குறித்து முதல்வர் ஸ்டாலின எங்களுக்கு ஆவணம் செய்ய வேண்டி கேட்டுக் கொள்கிறோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்.
அதனை அடுத்து, பாதுகாப்பு கருதி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்தனர்.
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி
