சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.!
விருதுநகர் அருகே சார்ஜ் போட்டப்படி லேப்டாப்பை பயன்படுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்திமயில்(22). இவர் சார்ஜ் போட்டபடி லேப்டாப்பை பயன்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
