Breaking News

ஆதாருடன் செல்போன் எண் இணைக்காவிட்டால் முதியோர் உதவித்தொகை நிறுத்தம் என பரவும் வதந்தி

அட்மின் மீடியா
0

ஆதாருடன் செல்போன் எண் இணைக்காவிட்டால் முதியோர் உதவித்தொகை நிறுத்தம் என பரவும் வதந்தி

தமிழக அரசு சார்பில் ஆதரவற்ற முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உதவித் தொகைபெறுபவர்கள் ஆதார் கார்டுடன் மொபைல் நம்பரை இணைக்காவிட்டால் முதியோர் உதவி தொகை உடனடியாக நிறுத்தப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன.

உண்மை என்ன?

இது முற்றிலும் வதந்தியே.

தமிழ்நாடு அரசு ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித்தொகை சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை அறிவதற்கு பயனாளிகளின் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்ளும் போது, பெரும்பாலான எண்கள் தவறாக உள்ளதால், சரியான எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், இதற்கு கால நிர்ணயம் அறிவிக்கவில்லை. இதற்கிடையில், இந்த மாதத்துக்குள் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்காவிட்டால் முதியோர் உதவித் தொகை நிறுத்தப்படும் என்று வதந்தி பரப்பப்படுகிறது. என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அறிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள் மறுப்பு செய்தி

Give Us Your Feedback