Breaking News

குவைத் தீ விபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அட்மின் மீடியா
0
குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி கிடைக்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதல்வர் ஆணை

தமிழர்களின் விவரங்களைப் பெற்று மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு




அயலகத் தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்ள:-

+91 1800 309 3793,

+91 80 6900 9900, 

+91 80 6900 9901 

குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மருத்துவமனைகளில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

+91 1800 309 3793

+91 80 6900 9900

+91 80 6900 9901

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback