அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் படு தோல்வியை சந்தித்த பாஜக வேட்பாளர்! முழு விபரம்
அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் படு தோல்வியை சந்தித்த பாஜக வேட்பாளர்! முழு விபரம்
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பாஜகவிடம் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 290 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் ‘இந்தியா’ கூட்டணி 235 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சல்லு சிங் தோல்வியடைந்தார்.
பைசாபாத் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,51,289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அயோத்தி ராமர் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேக விழா நடந்தது. இதற்கிடையில், 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோவிலுக்கு 'பாபர் பூட்டு' போடுவார்கள், கோவிலை புல்டோசர் மூலம் தகர்ப்பார்கள் என, பா.ஜ.க தலைவர்கள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
வாக்கு நிலவரம்:-
அமாஜ்வாடி கட்சியை சேர்ந்த AWADHESH PRASAD Won 554289 வாக்குகள் பெற்று வெற்றி
பாஜகவை சேர்ந்த LALLU SINGH 499722 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2454.htm
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
