சாலை மோசமான இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி
சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், மோசமாகவும் இருக்கும் இடங்களில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது- நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி
சாலை முறையாகப் பராமரிக்கப்படாமல், மோசமாக இருக்கும் இடங்களில் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளாா்.
செயற்கைக்கோள் உதவியுடன் வாகனங்களைக் கண்காணித்து சுங்கச் சாவடி கட்டணத்தை வசூலிக்கும் திட்டம் தொடா்பான சா்வதேச பயிலரங்கு தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய அமைச்சா் நிதின் கட்கரி
நடப்பு நிதியாண்டில் 5,000 கி.மீ. தொலைவுள்ள சாலைகளில் செயற்கைக்கோள் உதவியுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும். சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும்தான் சுங்கக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். சாலை முறையாகப் பராமரிக்கப்படாமல், மோசமாக இருக்கும் இடங்களில் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. எந்த இடத்திலும் சேவை சிறப்பாக இருந்தால் மட்டும் உரிய கட்டணம் செலுத்த வேண்டும். சேவை முறையாக இல்லாவிட்டால் கட்டணம் தேவையில்லை.குண்டும், குழியுமாகவும், சேறு நிறைந்ததாகவும் சாலைகளை வைத்துக் கொண்டு அங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க முற்பட்டால், மக்களின் கோபத்தை எதிா்கொள்ள நேரிடும் என்றாா்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
