Breaking News

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திமுக கொடுத்த புதிய பொறுப்பு!

அட்மின் மீடியா
0

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திமுக கொடுத்த புதிய பொறுப்பு!

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த சேகர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது; அத்தேர்தலுக்கு செஞ்சி மஸ்தான் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார் . இதன் காரணமாக விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வாகியுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து கடந்த வாரம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback