Breaking News

தமிழ்நாட்டில் அதிமுக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் அதிமுக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை முழு விவரம்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ கூட்டணியுடன் களம் கண்டது. மொத்தமாக 33 இடங்களில் அ.தி.மு.க இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. 

அ.தி.மு.க கூட்டணியில் விருதுநகரில் களமிறங்கிய தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன் மட்டுமே ஆரம்பத்தில் இருந்து முன்னிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 6 மணி நேரம் கடந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. 

தாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்ட பாஜகவும் எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை. 

தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியும், விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும் மட்டுமே  முன்னிலையில் உள்ளனர். 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback