சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிப்புகள், திட்டங்கள் என்ன என்ன முழு விவரம்
அட்மின் மீடியா
0
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிப்புகள், திட்டங்கள் என்ன என்ன முழு விவரம்
சென்னை மாநகரத்தில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்
- நில உரிமை உள்ள நலிவுற்ற மக்கள் பயன் பெறும் வகையில் தாமாக வீடுகட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் 1 இலட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும்.
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்காக நாவலூர் திட்டப்பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்படும்.
- பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தொழிற் பயிற்சி கூடம் அமைக்கப்படும்.
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மகளிர் மேம்பாட்டிற்காக 2000 மகளிருக்கு சிறப்பு சுயதொழில் பயிற்சி வழங்கப்படும்.6.ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் நல்லகவுண்டன்பாளையம் திட்டப்பகுதியில் கடைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை ரூ. 1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் விளையாட்டில் ஆர்வம் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5000 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
- மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை உள்ள மெரினா பாரம்பரிய வழித்தடம் ₹10 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
- சென்னையின் முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் ₹5 கோடி செலவில் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மேம்படுத்தப்படும்.
- சென்னையில் ₹40 கோடி மதிப்பீட்டில் கைவண்ணம் சதுக்கம் அமைக்கப்படும்
- கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ₹10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ₹15 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கப்படும்.
- கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ₹7 கோடி செலவில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.
- சென்னையில் ₹30 கோடி செலவில் 3 பன்னோக்கு மையங்கள் அமைக்கப்படும்.
- சென்னையில் அமைந்துள்ள 10 சுரங்க பாதைகள் ₹8 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
- தியாகராய நகர் பேருந்து நிலையம் ₹10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்
- போரூர் மற்றும் பெருங்குடி ஏரிகள் தலா ₹10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) திட்டம் செயல்படுத்தப்படும்.
- சமூக நலத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1,20,000 ஆக உயர்த்தப்படும்
- கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு சுயதொழில் செய்ய தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும்.
- திருவள்ளூர், கோயம்பத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 6 அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் ரூ.1 கோடியில் மறுசீரமைக்கப்படும்.
- அனைத்து மாவட்டங்களிலும் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ள 451 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.9 கோடியில் முட்டை உரிப்பான் இயந்திரங்கள் வழங்கப்படும்.
- ரூ.29 கோடி செலவில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு புதிய கைப்பேசிகள் வழங்கப்படும்.
- கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படும் சிறார்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதை திட்டம் ரூ.40 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.
- மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கூடுதல் துயில்கூடங்கள் ரூ.1 கோடியில் அமைக்கப்படும்.
- சென்னை, திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தன்னார்வத் தொன்டு நிறுவனங்கள் மூலமாக இரவல் பெறுவோர்களின் மறுவாழ்வுக்கான இல்லங்கள் ரூ.2.80 கோடியில் அமைக்கப்படும்.
- கோயம்புத்தூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கண்காணிப்பாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளருக்கான புதிய குடியிருப்பு கட்டடங்கள் ரூ.2 கோடியில் கட்டப்படும்.
- ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.1 லட்சம் வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 'முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்' செயல்படுத்தப்படும்.
- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாநில விருது இனி ஹெலன் கெல்லர் விருது என அழைப்பபடும்
- மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவி தொகை ரூ.2000, 40%த்திற்கு மேல் பாதிப்படைந்த புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடைய 5081 மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் கூடுதலாக ரூ.12.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் விரிவுபடுத்தப்படும்.
- செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக செயல்படும் 10 அரசு சிறப்பு பள்ளிகளில் பாடத்திட்டம் முழுவதையும் சைகை மொழியில் தயாரித்து எதிர்வினை குறியீடு (QR Code) மூலம் அறிந்துகொள்ளும் வகையில் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் முதற்கட்டமாக முதல் வகுப்பு மாணவர்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உணவூட்டு மானிய உதவித்தொகை ரூ.1,200 லிருந்து ரூ.1,400 ஆக உயர்த்தி 12,853 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.279.96 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் விரிவுபடுத்தப்படும்.
- பார்வைத் திறன் குறைபாடுடைய அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கற்பிக்கும் கருவிகள் மற்றும் தொட்டுணரக்கூடிய புத்தகங்கள் அடங்கிய பெட்டி ரூ.5000 முதல் ரூ.10000 மதிப்பில் 430 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.34.50 செலவில் வழங்கப்படும்
- அரசு சிறப்புப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையங்களில் தங்கி பயிலும் பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைக்கான மானியத் தொகை ரூ.500 முதல் ரூ.600க்கு உயர்த்தப்பட்டு 1154 மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.11.66 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
- அறிவுசார் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறை தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு, அறிவுசார் குறைபாடு மற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி அரசு பணியார்களுக்கு மீண்டும் துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்படும்.
- பழுதடைந்த வாகனங்களுக்கு பதிலாக புதிய இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
- பழுதடைந்த காதொலிக்கருவிகளுக்கு பதிலாக புதிய காதொலிக்கருவிகள் வழங்கப்படும்.
- பழுதடைந்த பிரெயில் கைக்கடிகாரங்களுக்கு பதிலாக புதிய பிரெயில் கைக்கடிகாரங்கள் வழங்கப்படும்.
- அரசு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக சென்னையில் துவங்கப்படும்.
தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாக பயனடையும் விதமாக 2500 சதுர அடி நிலத்தில் 3 ஆயிரத்து 500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு இனி கட்டிட அனுமதி பெற தேவையில்லை என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்துள்ளார்.கட்டிட அனுமதி பெற தேவையில்லை என்றாலும் அவர்கள் கட்டிட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.அதனைப் போலவே 750 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் கட்டிடங்கள் 8 சமையலறைக்குள் இருந்தால் அவர்களுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அதற்காக விதிகளை மீறக் கூடாது. கட்டிட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 300 சதுர மீட்டருக்குள் கட்டிட பரப்பளவு கொண்ட 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டிடங்களுக்கும் கட்டிட முடிவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.
Tags: தமிழக செய்திகள்
