Breaking News

அரசு நிலங்களில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களை அகற்ற கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

அரசு நிலங்களில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களைஅகற்ற கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 

அரசு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை 6 மாத காலத்துக்குள் அகற்ற கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் குத்தகைக்கு விடப்பட்ட அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு மத வழிபாட்டுத்தலம் கட்டப்பட்டது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தோட்டக்கலைத் துறை சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 


இந்த மனு நீதிபதி குஞ்சிகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அரசு நிலத்தில் எந்த மத வழிபாட்டுத் தலத்தையும் கட்ட அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

நீதிபதி குஞ்சிகிருஷ்ணன் தன்னுடைய உத்தரவில் மேலும் கூறியது: கடவுள் தூணிலும், துரும்பிலும் இருக்கிறார். எனவே அரசு நிலத்தில் மத வழிபாட்டுத் தலங்களைக் கட்ட வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. அரசு நிலத்தில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை ஒரு வருடத்திற்குள் இடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரசு சொத்துக்களை அடையாளம் கண்டு அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசு, கேரள காவல்துறை மற்றும் பத்தனம்திட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கூறிய கேரள தோட்டக்கலைத்துறையின் மனுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் பதிலளித்துள்ளது. 

அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து வழிபாட்டுதலங்கள் கட்டப்படுவது  மாநிலத்தின் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும். அரசு நிலத்தில் ஒரு மதத்திற்கு தெய்வத்தை நிறுவ அனுமதித்தால், மற்ற மதத்தினரும் தங்கள் மத தெய்வங்களை அமைக்கத் தொடங்குவார்கள். இதனால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் உருவாகும்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback