Breaking News

குஜராத்தில் இஸ்லாமிய பெண்ணுக்கு வீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்! முழு விபரம்

அட்மின் மீடியா
0

குஜராத்தில் இஸ்லாமிய பெண்ணுக்கு வீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்! முழு விபரம்

குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக குடியிருப்பு வாசிகள் போராட்டம் நடத்தி நடத்தியுள்ளனர் . 

மொத்தமாக 462 வீடுகளை உள்ளடக்கிய இந்த குடியிருப்பில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வீடு கொடுப்பது குடியிருப்பு வாசிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு, தேவையற்ற தொல்லையையும் உண்டாக்கும் . எனவே அந்த பெண்ணுக்கு வேறு குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்த குடியிருப்பில் வசிக்கும் 33 பேர் அவருக்கு வீடு கொடுக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.

News SourceNews Source

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback