Breaking News

பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடு பலியிட தடையில்லை ஐகோர்ட் கிளை உத்தரவு

அட்மின் மீடியா
0

பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. 

பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் பலியிட தடை விதிக்கக் கோரி திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார் அந்த மனுவில், 



இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் குர்பானி என்ற பெயரில் ஆடு மாடுகளை வாங்கி பலியிட்டு வருகின்றனர். இந்த பண்டிகையின் போது ஆடு மாடுகளை வாங்கி வந்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறுத்து பலியிட்டு வருகின்றனர் 

திருச்சி மாநகரில் இதுபோன்று ஆடு மாடுகள் பலியிடுவதற்கு மாநகராட்சி சார்பாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ள இடங்களை மீறி சட்ட விரோதமாக நூற்றுக்கும் அதிகமான இடங்களில் ஒவ்வொரு தெருக்கள் இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் பள்ளி கல்லூரி இடங்களில் இதுபோன்று பலியிட்டு வருகின்றனர். 

கால்நடைகள் பலியிடுவது குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம்,உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளையும் வழிமுறைகளையும் வகுத்துள்ளது .எனவே பக்ரீத் பண்டிகையின் போது மாநகராட்சிஅனுமதி இல்லாத இடங்களில் ஆடு மாடுகளை அறுத்து பலியிட தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, 

திருச்சி மாநகராட்சியில் ஆடு, மாடுகளை பலியிட 10 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதரீதியான சடங்குகளில் கட்டுப்பாடு ஏதும் விதிக்க முடியாது என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் குர்பானி என்ற பெயரில் ஆடு மாடுகளை வாங்கி பலியிட்டு வருகின்றனர்.

17ஆம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ள சூழலில் வழக்கில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆடு, மாடுகளை பலியிடும் சமூகத்தினரின் வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் ஆடு மாடுகளை அறுத்து பலியிடுவர்களை வாதங்களை கேட்காமல் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. எனவே மனுதாரர் இஸ்லாமிய சமூகத்தினரோ அல்லது ஆடு மாடுகளை அறுத்து பலியிடும் சமூகத்தினரை எதிர்மனுதாரராக இணைத்து மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback