பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!
தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு முன்பதிவு ரயில் இயக்கம்இன்று மற்றும் 14ம் தேதி இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படுகிறது
நாளை மற்றும் வரும் 17ம் தேதி மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு பகல் 1.20 மணிக்கு புறப்படுகிறது- தென்னக ரயில்வே தகவல்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – நாகர்கோவில் இடையே இன்று, நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடைகிறது.
மறுமார்க்கமாக நாகர்கோவில் இருந்து நாளை (ஜூன் 15) பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் ரயிலானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.
அதேபோல், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கும், பின்னர் மறுமார்க்கமாக நாகர்கோவிலிருந்து 17-ம் தேதி புறப்பட்டு திங்கட்கிழமை(ஜூன் 18) தாம்பரத்தையும் சிறப்பு ரயில் வந்தடைகிறது.
தாம்பரம் – மங்களூரு சந்திப்பு சிறப்பு ரயில்
தாம்பரம் – மங்களூரு சந்திப்பு சிறப்பு ரயில் (எண் 06047) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜூன் 14, 16, 21, 23, 28, 30″ ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 13:55 மணிக்குப் புறப்படும் எனவும், மறுநாள் காலை 6:55 மணிக்கு மங்களூரு சந்திப்பை வந்தடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் மறுமார்க்கமாக (எண்06048) மங்களூரு சந்திப்பு – தாம்பரம் ரயில் ஜூன் 15, 17, 22, 24, 29, மற்றும் ஜூலை 1 தேதிகளில் சனிக்கிழமைகளில் பிற்பகல் 12:00 மணிக்குப் புறப்படும். திங்கட்கிழமைகளில் இந்த ரயில் மறுநாள் மாலை 4.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு
