நிபந்தனைகளுடன் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம் முழு விவரம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக கேபினட் கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்த நிறைவேற்றியுள்ளது.
கருகலைப்புக்கு நிபந்தனைகள்:-
கர்ப்பமானது ஒரு பெண்ணுடன் அவளது விருப்பத்திற்கு மாறாக, அவளது சம்மதமின்றி அல்லது போதுமான விருப்பமின்றி உடலுறவின் விளைவாக இருந்தால் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும்.
அதேபோல் கர்ப்பத்திற்கு காரணமானவர் அந்த பெண்ணின் திருமணத்திற்கு தகுதியற்ற உறவினர்களில் ஒருவராக இருந்தாலும் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும்
கருத்தரித்து 120 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் மற்றும் மருத்துவ சிக்கல்கள் இல்லாமல் கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம் அல்லது பாலுறவு வழக்கு உடனடியாகப் புகாரளிக்கப்பட வேண்டும், பின்னர் பொது வழக்கறிஞரின் அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட வேண்டும்.
இந்த தீர்மானம் தொடர்பாக அரசாணை வெளியிட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும்.
https://www.newarab.com/news/uae-allow-abortion-cases-rape-incest
Tags: வெளிநாட்டு செய்திகள்
