ஜெகன்மோகன் ரெட்டி வீடு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு இடிப்பு ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திர மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளாக ஜனசேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.இதையடுத்து, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4ஆவது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.
இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் ஹைதராபாத் இல்லத்தின் முன்பகுதியில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களை மாநகராட்சி அதிகாரிகள் இன்று இடித்தனர்.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் படுதோல்வியடைந்தது. இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ‘லோட்டஸ் பாண்ட்’ இல்லத்தின் முன் பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி சட்ட விரோத கட்டுமானங்களை அகற்ற ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் இன்று நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து புல்டோசர் மூலம் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டின் முன்புறத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதை அரசியல் பழிவாங்கல் என்றும் சந்திரபாபு நாயுடு தந்த அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கையை ஹைதராபாத் அதிகாரிகள் எடுத்துள்ளதாகவும் சாடியுள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/TheNaveena/status/1801879284987949549
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
