இந்திய வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் முழு விவரம்
அட்மின் மீடியா
0
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது
சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட பாஜக எம்பி ஓம் பிர்லா மற்றும் காங்கிரஸ் எம்பி கே சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்
18-வது மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்து மோடி அரசு மீண்டும் பதவியேற்றதை அடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24 கூடியது.
நேற்றைய தினம் பிரதமர் மோடி உள்பட 280 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள மக்களவை உறுப்பினர்கள் நேற்று (ஜூன் 25) பதவியேற்றறனர்.இதுவரை மக்களவை சபாநாயகர் தேர்வு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதை கருத்தில் கொண்டு, அரசு தரப்பில் மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் கார்கே உடன் ஆலோசனை மேற்கொண்டார். துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அதனை அரசு தற்போதே உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆளும் கூட்டணி இதனை ஏற்றுக் கொண்டால் சபாநாயகரை ஆதரிப்பதாக கார்கே நிபந்தனை விதித்தார்.
இந்நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17வது மக்களவையின் சபாநாயகராகவும் ஓம் பிர்லா இருந்தவர்.ஆளும் கூட்டணியின் இந்த அறிவிப்பை அடுத்து, 8 முறை மக்களவைக்குத் தேர்வான மூத்த காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் நிறுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இன்று அவர் சபாநாயகர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். இதன் காரணமாக சபாநாயகர் தேர்வில் போட்டி உறுதியாகி உள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
