மரணம் எப்படியெல்லாம் வருது பார்த்தீங்களா பைக்கில் சென்றவரை மாடு முட்டி பஸ் சக்கரத்தில் விழுந்து பலியான நபர் வைரல் வீடியோ
மரணம் எப்படியெல்லாம் வருது பார்த்தீங்களா மாடு முட்டி பஸ் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் பலி வைரல் வீடியோ
நெல்லை பேட்டை தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதராஜ் (58). இவர் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். இவர் வழக்கம் போல நேற்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது,
அப்பகுதியில் சண்டையிட்ட இரண்டு மாடுகள் சாலையின் குறுக்கே ஓடியது. அங்கு சாலையில் 2 மாடுகள் ஒன்றுக்கு ஒன்று முட்டியது. இதில் ஒரு மாடு, மற்றொரு மாட்டையும், வேலாயுதராஜையும் வேகமாக மொபட்டுடன் சேர்த்து முட்டி தள்ளியது. இதனால் வேலாயுதராஜ் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
அப்போது எதிரே நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பஸ் சக்கரத்தில் வேலாயுதராஜ் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வேலாயுதராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து காட்சிகள் அங்குள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/pt_nagarajan/status/1804557100477280369
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
