பாலஸ்தீனம் சுதந்திரம் பெற்ற தனி நாடாக அங்கீகரித்தது ஆர்மீனியா முழு விபரம்
பாலஸ்தீனம் சுதந்திரம் பெற்ற தனி நாடாக அங்கீகரித்தது ஆர்மீனியா முழு விபரம்
பாலஸ்தீனத்தின் காஸா மற்றும் ரபா பகுதிகளில் கடந்த 9 மாதங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 37,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். பல ஐரோப்பிய நாடுகளால் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதுதான் பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கான தீர்வாக முன்மொழிகிறது.
இந்நிலையில் ஆர்மீனியா பாலஸ்தீனிய அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது என்று ஆர்மீனிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது,
இஸ்ரேலின் எதிர்ப்பையும் மீறி அவ்வாறு செய்த சமீபத்திய நாடு.ஆர்மீனியா ஆகும். இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு தீர்வு காண பாலஸ்தீனம் தனி நாடாக இருக்க வேண்டும். அதற்கு அங்கீகாரமே தீர்வு என அர்மேனியா கூறியுள்ளதுறார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஏற்கனவே அங்கீகரித்துள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்பட தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
