Breaking News

நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் எத்தனை நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது முழு விவரம்

அட்மின் மீடியா
0

 நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் எத்தனை நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது

நாட்டை ஆளப்போவது யார்? மக்களவை தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் முழு விவரம்

பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் 17வது அமைச்சரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெற்றுள்ளது.

18-வது லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று நடந்து முடிந்துள்ளது

மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என  எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. 

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றார்கள், மேலும் இந்தியா கூட்டணியில் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி , நிதிஷ் குமார் என தொடர்சியாக விலகல் ஆகி இருப்பது INDIA கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும்,  அந்த கூட்டணியின் மீதும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது

இந்திய மக்களவைத் தொகுதிகள் என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க ஏதுவாக வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

இந்தியாவில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.இதில் 28 மாநிலங்களின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும், 8 ஒன்றியப் பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 19 உறுப்பினர்களும் அவர்களது மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளனர்.

நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் எத்தனை நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது

ஆந்திரப் பிரதேசம்  மாநிலத்தில் மொத்தம்  25 தொகுதிகள் உள்ளன

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் மொத்தம்  2 தொகுதிகள் உள்ளன

அசாம் மாநிலத்தில் மொத்தம்  14 தொகுதிகள் உள்ளன

பீகார் மாநிலத்தில் மொத்தம்  40 தொகுதிகள் உள்ளன

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம்  11 தொகுதிகள் உள்ளன


கோவா மாநிலத்தில் மொத்தம்  2 தொகுதிகள் உள்ளன

குஜராத் மாநிலத்தில் மொத்தம்  26 தொகுதிகள் உள்ளன

ஹரியானா மாநிலத்தில் மொத்தம்  10 தொகுதிகள் உள்ளன

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் மொத்தம்  4 தொகுதிகள் உள்ளன

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம்  5 தொகுதிகள் உள்ளன


ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம்  14 தொகுதிகள் உள்ளன

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம்  28 தொகுதிகள் உள்ளன

கேரளா மாநிலத்தில் மொத்தம்  20தொகுதிகள் உள்ளன

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம்  29 தொகுதிகள் உள்ளன

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம்  48தொகுதிகள் உள்ளன


மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம்  2 தொகுதிகள் உள்ளன

மேகாலயா மாநிலத்தில் மொத்தம்  2 தொகுதிகள் உள்ளன

மிசோரம் மாநிலத்தில் மொத்தம்  1 தொகுதிகள் உள்ளன

நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம்  1 தொகுதிகள் உள்ளன

ஒடிசா மாநிலத்தில் மொத்தம்  21 தொகுதிகள் உள்ளன


பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம்  13 தொகுதிகள் உள்ளன

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம்  25 தொகுதிகள் உள்ளன

சிக்கிம் மாநிலத்தில் மொத்தம்  1 தொகுதிகள் உள்ளன

தமிழ்நாடு மாநிலத்தில் மொத்தம்  39 தொகுதிகள் உள்ளன

தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம்  17 தொகுதிகள் உள்ளன


திரிபுரா மாநிலத்தில் மொத்தம்  2 தொகுதிகள் உள்ளன

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மொத்தம்  80 தொகுதிகள் உள்ளன

உத்தரகாண்ட்மாநிலத்தில் மொத்தம்  5 தொகுதிகள் உள்ளன

மேற்கு வங்காளம் மாநிலத்தில் மொத்தம்  42 தொகுதிகள் உள்ளன

அந்தமான் நிக்கோபார் 1 தொகுதி உள்ளன


சண்டிகரில் 1 தொகுதி உள்ளன

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி 1 தொகுதி உள்ளன

டாமன் மற்றும் டையூ 1 தொகுதி உள்ளன

என்சிஆர், டெல்லி 7 தொகுதிகள் உள்ளன

லட்சத்தீவு 1 தொகுதி உள்ளன


புதுச்சேரி 1 தொகுதி உள்ளன

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback