Breaking News

வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி! இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி! இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிப்பு

வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி! வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவிப்பு தேர்தல் அரசியலில் இறங்கினார் பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டி இடுகிறார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி வெற்றிபெற்றார் இந்நிலையில் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

மேலும் வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்துள்ளார். இதன் மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் தனது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டவுடன் அவரை கட்டி அணைத்து வாழ்த்துக்களை கூறினார் ராகுல் காந்தி. வயநாட்டுத் தொகுதிக்கு இனி தானும் தனது சகோதரியும் என இரண்டு மக்கள் பிரதிநிதிகள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback