Breaking News

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் மீது ஜூன் 24-ம் தேதி பரிசீலனை; மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26-ம் தேதி கடைசிநாள் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான ந.புகழேந்தி இவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

விக்கிரவாண்டி  வி. சாலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது திடீரென மேடையிலையே மயங்கி விழுந்த நிலையில் அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற திதொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback