Breaking News

வாட்ஸ்-அப்பில் இனி ஃபேவரைட் லிஸ்ட் போட்டுக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

வாட்ஸ்அப்பில் 'ஃபேவரிட்ஸ்' என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த அப்டேட் பிடித்த உரையாடல்களை நாம் பில்ட்டர் செய்து வைத்துகொள்ல உதவும் என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த அம்சம் சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான தொடர்புகளிலிருந்து பிடித்தவைகளை மட்டும் பிரிப்பது பயனுள்ளதாகத் தெரிகிறது. 

இப்போது புதிதாக 'ஃபேவரெட்ஸ்' (Favourites) என்ற புதிய வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஃபேவரேட்ஸ் அம்சம் உரையாடல்களை ஃபில்டர் செய்ய உதவுவதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கமான contacts இல் இருந்து ஃபேவரேட்டை மட்டும் பிரித்து பார்க்க பயன்படும் எனத் தெரிகிறது.

பின் சேட் அம்சத்தை பயன்படுத்தி 3 உரையாடல்களை மட்டும் பின் செய்ய முடிகினது. இனி ஃபேவரெட்ஸ் அம்சம் அதற்கு ஈடான அம்சமாக இருக்கும். விருப்பமான உரையாடல்களை மட்டும் ஃபேவரேட்டாக சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

இதனால், உரையாடல்களை பில்டர் செய்ய All, Unread, Groups ஆகியவற்றுடன் ஃபேவரேட்ஸ் என்பதும் சேர்க்கப்படுகிறது. இப்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் உள்ள இந்த வசதி, விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback