Breaking News

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பா.ம.க, தலைவர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பதில்அளித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் தொடர்பான தண்டனைகள் கடுமையாக்கப்பட உள்ளன.போதைப் பொருள் விற்பனைகளுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையானதாகவும் இல்லை.தண்டனையைக் கடுமையாக்கி குற்றங்களை முற்றிலும் தடுக்க, முதற்கட்டமாகத் 'தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937'-ல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback