Breaking News

சென்னை மாநகர பேருந்துகளில் இனி கூகுள்பே,போன்பேயில் டிக்கெட் எடுக்கலாம் முழு விபரம்

அட்மின் மீடியா
0

சென்னை மாநகர பேருந்துகளில் இனி கூகுள்பே,போன்பேயில் டிக்கெட் எடுக்கலாம் முழு விபரம்

சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் (ETM-கள்) முறை செயல்பாட்டுக்கு வந்தன.

அரசு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை மூலம் டிக்கெட் பெறும் வசதி  பிப்ரவரி மாதம் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமல் செய்யப்பட்டது. 

இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யு.பி.ஐ. மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. 

அத்துடன் விரைவு பேருந்துகளில் ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது . 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback