மலைகளுக்கு நடுவே செல்லும் நீலகிரி மலை ரெயில் தென்னக ரயில்வே வெளியிட்ட வீடியோ பார்க்க
மலைகளுக்கு நடுவே செல்லும் நீலகிரி மலை ரெயில் தென்னக ரயில்வே வெளியிட்ட வீடியோ பார்க்க
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நீலகிரி மலை ரெயில் சேவை தினசரி நடைபெற்று வருகிறது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.இந்நிலையில், மலைகளுக்கு நடுவே நீலகிரி மலை ரெயில் செல்லும் அழகான காட்சியை தெற்கு ரெயில்வே வீடியோவாக வெளியிட்டுள்ளது. எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ரெயிலின் பிரம்மிப்பூட்டும் வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளை கடந்து சென்றுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/GMSRailway/status/1796444014939681230
Tags: தமிழக செய்திகள்
