Breaking News

பகுதி நேர BE படிப்புக்களுக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் தெரிந்து கொள்ள

அட்மின் மீடியா
0

பகுதி நேர BE படிப்புக்களுக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் தெரிந்து கொள்ள

4 ஆண்டுகள் பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 23-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பகுதி நேர பொறியியல் கல்லூரிகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூன் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிதொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் கோவை, மதுரை, நெல்லை, சேலம், பர்கூர், காரைக்குடி, வேலூரில் அமைந்துள்ள 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பிஇ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

Civil

Mechanical

Electrical 

EEE

Electrical 

ECE

Electrical 

CSE

சிவில், மெக்கானிக்கல் உட்பட 6 துறை படிப்புகளில் 1400 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.ptbe-tnea.com என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இந்த படிப்புகளில் சேருவதற்கான வழிமுறைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதில், இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவா்கள் சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், இந்தப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா் டிப்ளமோ முடித்து இரு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். 

மேலும், விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும். இதில் சோ்க்கை பெற வரும் ஜூலை 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வியாண்டில் 4 ஆண்டுகள் பகுதிநேர பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளம் மூலம் மட்டுமே நடைபெறும். 

There is no age limit for seeking admission to Part time B.E. Degree courses

Tags: கல்வி செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback