Breaking News

சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் ஆட்சியமைக்கப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை நிலவரம் arunachal pradesh sikkim election result

அட்மின் மீடியா
0

சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் ஆட்சியமைக்கப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை நிலவரம் முழு விவரம்



சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இரு மாநில பேரவையின் பதிவிக்காலம் இன்றுடன் முடிவதால் முன்கூட்டியே எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவைக்கு பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளது. 

அருணாச்சல பிரதேசம்:-

60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது. பெமா காண்டு தலைமையிலான பாஜக அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. இவரே இந்தியாவின் இளம் வயது முதல்வர் ஆவார். 

அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் 82 சதவீத வாக்குகள் பதிவாகின..

சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியது.

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 31 இடங்கள் தேவை. இந்த சூழலில் முதலமைச்சர் பெமா காண்டு உள்பட 10 பா.ஜனதா வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். இதனால் எஞ்சியுள்ள 50 தொகுதிகளில் மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஏற்கனவே 10 இடங்களை பெற்று விட்ட பாஜக இன்னும் 21 இடங்களை பிடித்தால் ஆட்சி அமைத்து விடும்

இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையில் பாஜக் 25 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. இதனால் அருனாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்க போவது உறுதியாகி உள்ளது

சிக்கிம்:-

இதே போல் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 6 மணிக்கு தொடங்கியது. 

சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவானது. சிக்கிமில் உள்ள ஒரு மக்களவை தொகுதியில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக பிரேம் சிங் தமன் ஆட்சியில் உள்ளார். 

சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் 32 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) மற்றும் சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) இடையே போட்டி நிலவுகிறது. 

தற்போதைய நிலவரப்படி

32 தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 

ஆளும் எஸ்.கே.எம். கட்சி ,-28 இடங்களில் முன்னிலை

 எதிர்கட்சியான எஸ்.டி.எப்., - 1 இடங்களில் முன்னிலை

 இங்கு பிரேம்சிங்தமாங் மீண்டும் முதல்வராகிறார்.

தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/AcResultGen2ndJune2024/index.htm

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback