Breaking News

ஆந்திர மாநிலத்தில் ஆட்சியமைக்கும் சந்திரபாபு - 9 ஆம் தேதி ஆந்திர முதலமைச்சராக பதவியேற்கிறார் Andhra Pradesh Election Results 2024

அட்மின் மீடியா
0

Andhra Pradesh Election Results ஆந்திர மாநிலத்தில் ஆட்சியமைக்கப்போவது யார்? தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் Andhra Pradesh Election Results

காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கப்போவது யார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 88 இடங்கள் தேவை,

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி vs சந்திரபாபு நாயுடு இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் வெல்லப்போவது யார் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.


தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அவருக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார். பிரதான போட்டி இவர்களுக்கு இடையே தான் இருக்கிறது. இவை தவிரக் காங்கிரஸ் கட்சியும் களத்தில் உள்ளது.

கடந்த தேர்தலில் ஜெகன் கட்சி ஒரு க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பதிவு செய்தது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151இல் வென்று ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். 

மேலும் சந்திரபாபு நாயுடு கட்சியால் வெறும் 23 இடங்களில் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் மற்றும் பாஜகவால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.

தெலுங்கு தேசம் Telugu Desam - TDP  133

Janasena Party - JnP  20

Yuvajana Sramika Rythu Congress Party - YSRCP  15

Bharatiya Janata Party - BJP  7 


தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/AcResultGenJune2024/index.htm

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback