Breaking News

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.Backer மரணமடைந்தார் முழு விவரம் S.M.Backer died

அட்மின் மீடியா
0
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.Backer  மரணமடைந்தார் முழு விவரம்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் அவர்கள் சற்று முன் இறைவன் அழைப்பை ஏற்றுக்கொண்டார்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவரும் விண் தொலைக்காட்சியின் இயக்குநர்களில் ஒருவரும் ஆன  S.M.பாக்கர் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் ஆவார்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர், தமுமுகவின் மாநில பொருளாளராக செயல்பட்டவர். தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தனியாக பிரிந்து 16-05-2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை நிறுவினார். பின்னர் அதிலிருந்து விலகி, 2009ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை நிறுவி அதன் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.Backer  மரணமடைந்தார்

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback