9ம் தேதி பிரதமர் பதவியேற்பு குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஜூன் 9ம் தேதி இரவு 7.15 மணிக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு!
நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக ஜூன் 9 ஆம் தேதி பதவியேற்கின்றார்
நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 235 இடங்களிலும் பிற கட்சிகள் 17 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்துள்ளது.
அதேபோல் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது
Tags: இந்திய செய்திகள்
