இந்திய ஹஜ் பயணிகள் 98 பேர் உள்பட 1000 பேர் உயிரிழப்பு! முழு விவரம் Heat wave kills 1000 hajj pilgrims in Saudi Arabia
இந்திய ஹஜ் பயணிகள் 98 பேர் உள்பட 1000 பேர் உயிரிழப்பு! முழு விவரம் Heat wave kills 1000 hajj pilgrims in Saudi Arabia
முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவில் குவிந்துள்ளனர்.
மெக்காவில் 51 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், புனித பயணம் மேற்கொள்பவர்கள், அதிக வெப்ப சூழலில் நீர்ச்சத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
வெப்ப தாக்கத்தினை எதிர்கொள்ள கூடிய வகையிலான மருத்துவ குழுவினர் உள்பட 1,600 இராணுவ வீரர்களை சவுதி இராணுவம் அனுப்பியுள்ளது. இதேபோன்று, 30 அதிரடி விரைவு குழுவினரும், 5 ஆயிரம் சுகாதார மற்றும் முதலுதவி தன்னார்வலர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்த வருடம் ஹஜ் பயணத்தின் போது 1000 க்கும் மேற்ப்பட்டோர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில் இந்தியாவை சேர்ந்த 98 ஹாஜிகள் மரணமடைந்துள்ளார்கள், இந்தாண்டு 1,75,000 இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில், வயது மூப்பு மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் 98 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் இந்த ஆண்டு உயிரிழந்துள்ளனர், கடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின்போது 187 இந்தியர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது
அதிகப்படியான வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக, யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் காலை 11 முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மட்டுமல்லாது பயணிகளுக்கு ஏசி வசதியுடன் கூடிய தங்கும் இடங்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள்.இருப்பினும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் பலரின் உடலை சவுதியிலேயே அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்திருக்கிறது.
Tags: மார்க்க செய்திகள் வெளிநாட்டு செய்திகள்
