73 கி.மீ. மைலேஜ் ,புளூடூத் மற்றும் யுஎஸ்பி , புதிய பொலிவுடன் ஸ்பிளெண்டர் பைக் 2.0 சிறப்பம்சங்கள் முழு விவரம் Hero Splendor Plus Xtec 2.0
73 கி.மீ. மைலேஜ் ,புளூடூத் மற்றும் யுஎஸ்பி , புதிய பொலிவுடன் ஸ்பிளெண்டர் பைக் 2.0 சிறப்பம்சங்கள் முழு விவரம் Hero Splendor Plus Xtec 2.0
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஸ்ப்ளெண்டர் பைக் மாடலை அறிமுகப்படுத்தி, 30 ஆண்டுகள் பூர்த்தியானதை கொண்டாடும் விதமாக ஸ்ப்ளெண்டர் பிளஸ் XTEC 2.0 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 73 கிமீ மைலேஜ் தரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் இதன் விலை 82 ஆயிரத்து 911 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பழைய மாடலுடன் ஒப்பிடும்போது, இந்திய சந்தையில் புத்தம் புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக்கின் விலை 3 ஆயிரம் ரூபாய் அதிகம் ஆகும்.
ஏர்-கூல்ட், 97.2சிசி, ஸ்லோப்பர் இன்ஜினை கொண்டு இயங்குகிறது.
இது 8,000ஆர்பிஎம்மில் 8.02 ஹெச்பி மற்றும் 6,000ஆர்பிஎம்மில் 8.05என்எம் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டுள்ளது.
100சிசி பயணிகள் பைக்குகளுக்கான விதிமுறைக்கு உட்பட்டு, இந்த இன்ஜின் 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
விலை :-
ஸ்ப்ளெண்டர்+ Xtec 2.0 மாடல் தங்கள் வழக்கமான ஸ்ப்ளெண்டர்+ பைக்கில் பயப்படுத்தப்படும் 100சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய 2.O மாடல் பைக்கானது முந்தைய Xtech மாடலை விட 3 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு ரூ.82,911 (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Xtec 2.0 மாடலில் LED ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய மடலை விட டிசைனில் மெருகேற்றம் செய்யப்பட்டுள்ளது. Xtech 2.O மாடலானது,
வண்ணங்கள் :
மேட் கிரே (சாம்பல் நிறம்),
க்ளோஸ் பிளாக் (கருப்பு)
PEARL FADELESS WHITE முத்து வெள்ளை
மற்றும் க்ளோஸ் ரெட் (சிகப்பு)
ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது
முக்கிய சிறப்பம்சங்கள் :
செல்போன் அழைப்பு மற்றும் குறுந்செய்தி அறிவிப்புகள் ஆகியவற்றை அறியும் வண்ணம் புளூடூத் கொண்டு இயக்கப்படும் டிஜிட்டல் கன்சோலை கொண்டுள்ளது.
டெலஸ்கோபிக் ஃபோர்க்
டூயல் ஷாக் சஸ்பென்ஷன்
இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள்
டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்
நீங்கள் பயணிக்கும்போது வரும் செல்ஃபோன் அழைப்பு மற்றும் செய்தி எச்சரிக்கைகளைப் பெறலாம்.
USB சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது.
சிறந்த பாதுகாப்புக்காக பக்கவாட்டு எஞ்சின் கட்ஆஃப் பொருத்தப்பட்டுள்ளது
மேலும் இந்த பைக்கிற்கு 5 ஆண்டுகள் அல்லது 70,000 கிமீ வாரண்டி கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://www.heromotocorp.com/en-in/motorcycles/practical/splendor-plus-xtec.html
Tags: தொழில்நுட்பம்

