Breaking News

குவைத் தீ விபத்தில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

குவைத் தீ விபத்தில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு முழு விவரம்



குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 53 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். 

இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நேற்றைய தினம் 2 தமிழர்கள் உயிரிழந்தாக முதலில் சொல்லப்பட்ட நிலையில், இன்று காலை பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. தற்பொழுது, அந்த தீ விபத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை, மற்றும் கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத் நாட்டில் தீ விபத்தில் இறந்த 7 பேரின் அடையாள விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது

வீராசாமி மாரியப்பன் - தூத்துக்குடி

எபமேசன் ராஜு - திருச்சி

கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை - கடலூர்

கோவிந்தன் சிவசங்கர் - சென்னை

புனாஃப் ரிச்சர்ட் ராய் - தஞ்சாவூர்

கருப்பணன் இராமு - இராமநாதபுரம்

முகமது ஷெரிப் - விழுப்புரம்

தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அறிவிப்பு

கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சின்னதுரை(42) என்பவர் குவைத் தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். 

இவருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது, சத்யா என்ற மனைவி உள்ளார் குழந்தைகள் கிடையாது. 

கருப்பணன் ராமு 

ராமநாதபுரத்தை சேர்ந்த ராமு என்பவர் தீ விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளாக என்பிடிசி நிறுவனத்தின் அவர் வேலை செய்து வருவதாகவும், கடந்த 11-ஆம் தேதியுடன் விசா முடிவடைந்த நிலையில், ஊதிய கணக்குகளை முடித்துவிட்டு நாடு திரும்ப இருந்ததாகவும் அவரது மகன் தெரிவித்துள்ளார்.

புனாஃப் ரிச்சர்ட் ராய் 

பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் பகுதியை சேர்ந்த ஆனந்த மனோகர் என்பவரது மூத்த மகன் புனாஃப் ரிச்சர்ட் ராய் என்.பி.டி.சி என்ற கட்டுமானப் கம்பெனியில் குவாலிட்டி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

முகமது ஷெரிப்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்தவர் முகமது ஷெரிப் (வயது35). இவர் கடந்த 12 ஆண்டுகளாக என்.பி.டி.சி ஸ்டீல் கம்பெனியில் போர்மேன் ஆக பணியாற்றி வருகிறார்.

Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback