Breaking News

6 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்டரை டெலிவரி செய்த பிளிப்கார்ட் முழு விவரம் Flipkart calls customer after 6 years over pending order

அட்மின் மீடியா
0

6 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்டரை டெலிவரி செய்த பிளிப்கார்ட் முழு விவரம் Flipkart calls customer after 6 years over pending order

                           

மும்பையில் வசிக்கும் அஹ்சன் கராபி, என்பவர் கடந்த 2018 ம் ஆண்டு பிளிப்கார்ட்டில் ஒரு ஜோடி செருப்பு ஆர்டர் செய்தார். ஆனால் அது அவருக்கு அப்போது டெலவரி செய்யவில்லை, இப்படியே 6 ஆண்டுகளாக அவர் ஆர்டர் செய்த செருப்பு டெலிவரி செய்யப்படாமல் இருந்துள்ளது.மேலும், அவர் கேஷ் ஆன் டெலிவரியில் ஆர்டர் செய்ததால். அவர் ஆர்டரை கவனிக்காமல் இருந்தார். 

மேலும், இந்த ஆர்டர் என்ன காட்டுகிறது என்று பார்க்க அவர் சமீபத்தில் பயன்பாட்டின் உள்ளே சென்றார். அப்போது, ​​'உங்கள் ஆர்டர் இன்று வரும்' என்று தான் காட்டியது. 

இந்நிலையில், நேற்று அவருக்கு பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து போன் வந்தது. அவருடைய ஆர்டரில் என்ன பிரச்சனை என்று கேட்டு தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டு, 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஆர்டர் செய்த செருப்புகளை ஃப்ளிப்கார்ட் வழங்கியுள்ளது. 

இந்த வித்தியாசமான அனுபவத்தை அஹ்சன் கராபி தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார். 

டிவிட்டர் பதிவு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/AHSANKHARBAI/status/1805588344166138242

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback