தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றம் செல்லும் 5 பெண் எம்.பி.க்கள் முழு விவரம்
தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றம் செல்லும் 5 பெண் எம்.பி.க்கள்!!
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி மூன்று லட்சத்து 92 ஆயிரத்து 738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்ட சிவசாமி வேலுமணி தோல்வியடைந்துள்ளார்.
கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்ட ஜோதிமணி ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 8 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் . இவரை எதிர்த்து அதிமுக தரப்பில் தங்கவேல் களம் இறக்கப்பட்ட நிலையில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார்.
தென்காசி தொகுதியில் ராணி ஸ்ரீகுமார் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்ட டாக்டர் k கிருஷ்ணசாமியை தோல்வியடைய செய்துள்ளார்.
மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா 2 லட்சத்து 71 ஆயிரத்து 183 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேந்ர்த பாபுவை தோல்வியடைய செய்து வெற்றி பெற்றுள்ளார்
தென் சென்னை தொகுதியில் மீண்டும் களம் இறக்கப்பட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 2 லட்சத்து 25 ஆயிரத்து 945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் வென்றுள்ளார்
Tags: அரசியல் செய்திகள்
